கடலூரில் பரபரப்பு: போராட்டத்தில் இறங்கிய வன்னியர் சங்கம்! குவிக்கப்பட்ட போலீஸ்! - Seithipunal
Seithipunal


வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொலை மிரட்டவிடுத்த விசிக கட்சியினரை கண்டித்து, கடலூர் மாவட்டம் புவனகிரியில் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், மஞ்சக்கொல்லை கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பாமக தொண்டர் செல்லத்துரையின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை பேற்படுத்தியுள்ளது. 

சம்பவத்தை பொறுத்தவரை, மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் சில நாட்களுக்கு முன்பு தமது சகோதரியின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு, பு.உடையூர் என்ற கிராமத்தின் வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். 

அவர்களை வழியை விட்டு ஒதுங்கி நின்று மது அருந்தும்படி செல்லத்துரை கூறியதால் ஆத்திரம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் அடங்கிய அந்த கும்பல், கட்டைகளாலும், மதுபாட்டில்களாலும் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். 

மேலும், கொலைவெறி அடங்காத கும்பல், அவரை கால்களால் எட்டி உதைத்தும், அவரது சட்டையில் உள்ள வன்னியர் சாதி சின்னத்தை மிதித்தும், அவதூறாக பேசியும் இழிவுபடுத்தி, மனிதநேயமும், பண்பாடும் இல்லாத இந்த நிகழ்வுகளை தங்களின் சாதனைகளாக காட்டிக்கொள்ளும் நோக்குடன் காணொலியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லத்துரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தாக்கியவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை தூக்காமல், மிகவும் சாதாரணமான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பாதுகாக்க முயல்வதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், செல்லத்துரையின் குடும்பம் மற்றும் ஊர்மக்களுக்கு ஆறுதல் கூறிய வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டி எடுப்போம் என்று விசிக-வினர் மிரட்டல் விடுத்து, இது திருமா காலம். இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை நாங்கள் அடித்துக் கொண்டு தான் இருப்போம். அவர்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று சாதி சண்டைக்கு வித்திடும் வகையில் பேசியுள்ளனர் விசிகவினர்.

இந்நிலையில், வன்னியர் சங்கத் தலைவரின் தலையை வெட்டுவோம் என கொலை மிரட்டவிடுத்த விசிக கட்சியினரை கண்டித்தும், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும், கடலூர் மாவட்டம், புவனகிரியில் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddaloire pmk and vanniyar sangam protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->