அண்ணாமலைக்கு போன் போட்ட ஸ்டாலின்! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது.

இதேபோல் திமுக சார்பிலும் அவரின் அரசு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடந்த ஜூன் 4-ம் தேதி கருணாநிதியின் உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மதிப்புள்ள நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

வரும் ஆக. 17-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழகஅரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார். 

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். 

மேலும் கருணாநிதி நாணயம் வெளியிட்டு விழா தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தன்னை அழைத்ததாகவும் அண்ணாமலை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும், அரசியல் நாகரிகத்துடன் பாஜக இந்த நிகழ்ச்சியில் பங்கே இருக்கிறது. ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது எனக்கு பிடிக்கவில்லை என்றும் அண்ணாமலை தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MK Stalin Call To BJP Annamalai for Karunanithi Coin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->