தம்பி சூர்யா.., முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி.! - Seithipunal
Seithipunal


தேசிய விருதுகள் பெற்ற திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரைத்துறையை ஆளட்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"தேசிய விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்கரா, ஜி வி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி மற்றும் சூரரைப்போற்று படக்குழுவினருக்கும்;

இயக்குனர் வசந்த், லட்சுமி ப்ரியா, ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கும்,

மடோனா அஷ்வின், யோகி பாபு மற்றும் மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள்! 

அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள்! சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்" என்று முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm MKStalin NationalFilmAwards 2022 winner


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->