முதல்வர் மு.க ஸ்டாலின் "மக்களுக்காக" கண்ணீர் வடிக்கிறார்.! - திருச்சி சிவா, எம்.பி..!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் கலவரம் தொடர்பாக டெல்லியில் நேற்று மாலை 3 மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தின் நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த அவர் "தென்கோடியில் இருக்கின்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மணிப்பூர் மக்களுக்காக கண்ணீர் வடிக்கிறார், வருத்தம் தெரிவிக்கிறார்.

ஆனால் டெல்லியில் இருக்கும் பிரதமர் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்ற ஆதங்கம் எங்களுக்குள் உள்ளது. மணிப்பூரில் நடக்கும் கலவரம் மனதிற்கு வேதனை அளிக்கிறது.

சுமார் 50 நாட்களுக்கு மேல் தொடரும் இந்த கலவரம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி சிறு கவலையோ ஆறுதலோ கூறாதது தான் அதிக சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு நாட்கள் கடந்தும் இன்னும் மணிப்பூரில் பிரச்சனை ஓயாததால் அனைத்து கட்சி குழு அங்கு செல்ல வேண்டும். 

இந்தப் பிரச்சினைக்குள் சென்று காரணங்களை ஆராய வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. இது இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை. இதை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் இவ்வளவு நாட்கள் இப்படி இருந்தது வேதனை அளிக்கிறது" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin sheds tears for the manipur people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->