CM ஸ்டாலின் முடிவு என்ன? ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்!
CM Stalin Governor Tea Party
வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை: கவர்னர் ஆர்.என்.ரவி தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படுவதால், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
பெ. சண்முகம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் : அரசியல் சாசனத்தையும் கூட்டாட்சி கோட்பாடுகளையும் மதிக்காத ஆர்.என்.ரவி கவர்னராக தகுதி இழந்துள்ளார். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விருந்தில் பங்கேற்காது.
இரா. முத்தரசன் இந்திய கம்யூனிஸ்ட்: மசோதாக்களை காலதாமதமாக்கி, மாநில உரிமையை மறுக்கும் கவர்னரின் செயல்பாடுகளை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விருந்தை புறக்கணிக்கிறது.
விடுதலை சிறுத்தைகள்: மாநில சுயாட்சிக்கு எதிரான ஆளுநர் நடவடிக்கைகளுக்கு எதிராக வி.சி.க. விருந்தில் பங்கேற்காது.
மனிதநேய மக்கள் கட்சி: ஆளுநர் செயல்பாடுகள் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக இருப்பதால், இந்த கட்சியும் விருந்தை புறக்கணிக்கிறது.
இந்நிலையில் ஆளுநர் விருந்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பாரா என்பதும் இன்னும் தெளிவாகவில்லை. சென்ற முறை போல திமுக பங்கேற்காது, அமைச்சர்கள் பங்கேற்றது போல பங்கேற்பார்களா? என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.
English Summary
CM Stalin Governor Tea Party