துயரமான செய்திகளைக் கேட்டு மிகுந்த வேதனையுற்றேன் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "விருதுநகர் மாவட்டம் . விருதுநகர் வட்டம், சின்ன மூப்பன்பட்டி கிராமம், கருப்பசாமி நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரோசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. அழகுமுத்து என்பவரின் மகன் கார்த்திக் ராஜா, திரு. மதியழகன் என்பவரின் மகன் முருகன், திரு. சக்கரை என்பவரின் மனைவி ஜக்கம்மாள் மற்றும் கெப்பிலிங்கம்பட்டி திரு. செல்வகுமரேசன் என்பவரின் மகன் சூரியா ஆகிய நான்கு நபர்கள் மழையின் காரணமாக ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், நிறைமதி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திரு.பிச்சமுத்து என்பவரின் மனைவி ஜெயக்கொடி தென்கீரனூர் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கள்ளக்குறிச்சி மாவட்டம் பண்ருட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு நபர்கள், இடி, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

இந்தத் துயரமான செய்திகளைக் கேட்டு மிகுந்த வேதனையுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன. இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Mourning to Lightning strikes and dies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->