#BigBreaking || பாமக எம்எல்ஏ., வைத்த கோரிக்கை., பக்கம் பக்கமாக வாசித்து., உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


சற்றுமுன் தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், 

"பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுவின் உடைய தலைவர் மாண்புமிகு கோ க மணி அவர்கள் பேசும்போது, பெண் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உட்பட நிகழ்வுகளில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இதுதொடர்பாக நானே காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, 24513 முகாம்கள் பள்ளி. கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளது/ 249 விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. போக்ஸோ வழக்குகளை விசாரிக்க தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர்... உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்ஸோ புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை இந்த அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

அதனால் இதுவரை 2363 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பதிவு செய்யப்பட்ட 338 வழக்குகளில் 135 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

போக்ஸோ வழக்குகளில் விரைவாக விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் அறிவுத்தியத்தின் பேரில், கடந்த மே மாதத்திற்கு பிறகு சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் போடப்பட்ட போக்ஸோ வழக்கு ஒன்றில், இருபத்தி மூன்று நாட்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 82 நாட்களில் முடிந்து தண்டனையும் வழங்கப்பட்டது என்பதை பேரவையில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, இதுபோல் முதல் தகவல் அறிக்கையில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை விரைவுபடுத்துவது ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்" என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM STALIN SAY ABOUT TN WOMEN SAFTY ISSUE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->