அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் - வெளிப்படையாகவே தனது ஆதரவை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.?! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், "கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. ஓ பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் இந்த ட்விட்டர் பதிவில், ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும், அவர் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்றும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருப்பது, அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் அண்மையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக பொதுக்குழு அறிவித்துள்ளது.

மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஓபிஎஸ்.,க்கு திமுக அரசும், முக ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்சி வருகிறார். 

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் என்றும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் துணைத் தலைவர் என்றும் அழுத்தம் திருத்தமாக ட்வீட் செய்து இருப்பது, ஓபிஎஸ்  -க்கு தமிழக முதல்வர் வெளிப்படையாகவே தனது ஆதரவை தெரிவித்ததாக ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதே சமயத்தில், "வெளிப்படையாக தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து தெரிவித்துள்ளார்" என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin twit for ops admk eps issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->