கோவை கார் 'குண்டு' வெடிப்பு எதிரொலி : மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு முன்னோட்டம் - பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


கோவை : கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோயில் எதிரே கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவன்) என்பவர் பலியானார். 

போலீசார் மற்றும் என்ஐஎ விசாரணையில் நாசகார சதித்திட்டத்துடன் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்த இருந்தது தெரியவந்த நிலையில், பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் சிக்கின. 

மேலும், ஜமேஷா முபின் கூட்டாளிகளாக கருதப்படும் ஆறு பேரை தனிப்படையினர் கைது செய்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு சம்மந்தமான தமிழக முழுவதும் சென்னை, கோவை, நாகை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 45 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், கோவை கார் கொண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, 'மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு' அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு முன்னோட்டமாக, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக 102 பேர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 90 பேரிடம் ரகசியமாக தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வந்திருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Car Bomb blast case some more action


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->