இந்தியா என்பது நாடு அல்ல.. ஒரு தேசம்.. காங்கிரஸ் தலைவர் அழகிரி விளக்கம்...!!
Congress Alagiri said India is not a country its a nation
வேலூர் மாவட்டத்தை அடுத்த சத்துவாச்சாரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே ஆளுநர் ரவி இங்கு அனுப்பப்பட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் செய்தியாளரிடம் பேசிய அவர் "தமிழகம் என்பதற்கும் தமிழ்நாடு என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ்நாடு என்பது தான் நம் நாடு; இது போன்ற பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்திய அரசு.
![](https://img.seithipunal.com/media/azhagiri KS-tu6q7.JPG)
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், உத்திரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களை சேர்ந்தது தான் இந்தியா. இந்தியா என்பது ஒரு நாடு இல்லை; அது ஒரு தேசம். நாடு என்பது வேறு; தேசம் என்பது வேறு. நாடுகளுடைய கூட்டமைப்பு தான் தேசம். தமிழர்களும் பஞ்சாபிகளும் இந்தியர்கள் தான். அனைத்து மக்களும் சேர்ந்து தான் இந்தியா. இது கவர்னருக்கு தெரிய வாய்ப்பில்லை" என ஆளுநரின் பேச்சுக்கு பதிலடி தந்துள்ளார்.
English Summary
Congress Alagiri said India is not a country its a nation