தேர்தலில் பூஜ்ஜியம் வாங்குவதில் காங்கிரஸ் 'ஹாட்ரிக்' பெறுவதோடு, கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்கிறது என்கிறார் பிரதமர் மோடி..!
Prime Minister Modi says Congress is defeating even coalition parties
டெல்லி சட்டசபைத் தேர்தலில் 48 இடங்களைப் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. தொண்டர்களுடன் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி அக்கட்சியின் தலைமை அலுவலகம் சென்று அங்கு தொண்டர்களுக்கு மத்தியில் பேசினார். அப்போது அவர்,
இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிகள் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கு பா.ஜ.க. செய்த வளர்ச்சி பணிகள் மட்டுமே காரணம். மோடியின் வாக்குறுதிகள் என்பது வளர்ச்சிக்கானது என்று குறிப்பிட்டார்.
![](https://img.seithipunal.com/media/DEL B-ajm4j.jpg)
அத்துடன், நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் முடிவு கட்டி வருகிறது. அக்கட்சிகளின் திட்டங்கள் மற்றும் ஓட்டு வங்கியை திருடுகிறது. கைகோர்க்கும் கட்சிகளுக்கு முடிவு நெருங்கி விட்டது என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார்.
![](https://img.seithipunal.com/media/DEL BJP-xw3ra.jpg)
மேலும், ஜாதி எனும் விஷத்தை காங்கிரஸ் நாடு முழுதும் பரப்பி வருகிறது. தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைவதுடன் மட்டும் அல்லாமல், கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இனிமேலும் காங்கிரசை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. 06 தேர்தல்களில் எதிலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை. பூஜ்ஜியம் எடுப்பதில் அக்கட்சி ஹாட்ரிக் சாதனை படைத்து உள்ளது. ஊழலுக்கு எதிரானவர்கள் ஊழலில் திளைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.
English Summary
Prime Minister Modi says Congress is defeating even coalition parties