பொது சிவில் சட்டம் மக்களை பிளவுபடுத்தும்.. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எச்சரிக்கை.!!
Congress Chidambaram warns common civil law will divide people
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசியதாவது ''கர்நாடக சட்டசபை தேர்தலில் தாராளமயம், ஜனநாயகம் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை கொண்ட முற்போக்கான மாநிலமாக வேண்டுமா அல்லது உள்நோக்கமுள்ள, பெரும்பான்மையான, சகிப்புத்தன்மை இல்லாத, பிற்போக்குத்தனமான மாநிலமாக மாற வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடக மாநில மக்கள் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பார்கள்.
கர்நாடக மாநிலத்தின் எதிர்காலத்திற்காக பாஜக வெற்றி பெறுவதையும், அந்த வெற்றியின் மூலம் பாஜக நுழைவதையும் நாம் தடுத்து நிறுத்த வேண்டும். பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கர்நாடக மாநிலத்தில் கொண்டு வருவதாக பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. அவை இரண்டும் சமூகத்தை பிளவுபடுத்தவும், சமூக மோதல்களைத் தூண்டி விடவும் சாத்தியம் உண்டு.
சில வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் என்ன நடந்தது என்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே கர்நாடக மக்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிரகாரிப்பார்கள் என்று நம்புகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற பேச்சை பாஜக பிரச்சினை ஆக்கி இருக்கிறது.
பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. வெறுப்புணர்வை பரப்புகிற எல்லா அமைப்புகளையும் காங்கிரஸ் எச்சரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி சட்டத்தின்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. நாங்கள் சட்டமும், அரசியல் சாசனமும் புனிதமானவை, அவற்றை தனி நபர்களோ, பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் அல்லது இது போன்ற வெறுப்புணர்வைப் பரப்புகிற அமைப்புகளோ மீற முடியாது என்று நம்புகிறோம்.
நாங்கள் தடை விதிப்பது உள்பட சட்டப்படி அவற்றின் மீது உறுதியான நடவடிக்கை எடுப்போம். காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துக்கு தேவையான இடங்களைப் பெறும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். தன் மீது அவதூறு வாரி இறைக்கப்படுவதாக பிரதமர் மோடி பிரச்சினை எழுப்பி இருக்கிறார்.
அவதூறு வாரி இறைப்பது என்றால் என்ன என்பது பார்க்கப்பட வேண்டும். தேர்தலில் தீவிரமாக அரசியல் மொழி பேசுவது அவதூறு அல்ல. சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக பாஜக தலைவர்கள் வீசிய அவதூறுகளை எண்ணிப் பார்ப்போமா? இது அர்த்தமற்ற செயல்" என பாஜகவை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Congress Chidambaram warns common civil law will divide people