தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ள காங்கிரஸ்!...ரூ.25 லட்சமா?...அந்த முக்கிய 5 வாக்குறுதிகள் இதோ!
Congress has made many election promises Rs 25 lakhs Here are the top 5 promises
ஜம்மு-காஷ்மீரில் இந்த மாதம் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக வரும் செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதி வரை என 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
மேலும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு கடந்த மாதம் நிறைவு பெற்றது. அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதற்கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் என்றும், 1 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் 11 கிலோ அரிசி, சுய உதவிக் குழுக்களில் ஈடுபடும் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் என முக்கிய 5 வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
English Summary
Congress has made many election promises Rs 25 lakhs Here are the top 5 promises