மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஓரே அணியில் திரள வேண்டியது அவசியம் - ஜெய்ராம் ரமேஷ்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இணைய வேண்டியது அவசியமாகும். மேலும் காங்கிரஸ் இல்லாத எந்த எதிர்க்கட்சி கூட்டணியும் வெற்றி பெறாது.

 காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சிகள் கூட்டணியும் வலுவாக இருக்கும். காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபெறும் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அதேபோல் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அவரது கருத்தை காங்கிரஸ் வரவேற்கிறது.

மேலும் பாஜகவுடன் எந்த ஒரு சமரசத்தையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் எப்போதும் எதிர்த்து வரும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே எந்தவித இரட்டை நிலைப்பாட்டையும் கொண்டிருக்காமல் பாஜகவை காங்கிரஸ் எதிர்த்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress jayram Ramesh speech about parliament election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->