கர்நாடகா அடுத்த முதல்வர் யார்? - இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி.!
Congress leader Mallikarjuna karkhe speech about Karnataka next CM
கர்நாடகா சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் என்னும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 120 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 69 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் இதுவரை முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் மற்றும் சித்தராமையா இடையே முதலமைச்சருக்கான போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டியளித்துள்ளார். தேர்தல் குறித்து அவர் பேசியதாவது, தவறான அரசுக்கு எதிராக கர்நாடக மக்கள் கொடுத்த தீர்ப்பு இது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் திரண்டு வந்து இங்கே தங்களின் பலத்தை காட்டினர். ஆனால் மக்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டனர்.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் பெங்களூருக்கு வருகை தந்து தேர்வு செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Congress leader Mallikarjuna karkhe speech about Karnataka next CM