பத்தோடு பதினொன்றாக போகும்.! முதல்வரிடம் நிவாரணத் தொகை வழங்க காங்கிரஸில் எதிர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தனது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலின பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் சட்ட சபை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எழுதியுள்ள கடிதத்தில் "காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரின் ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளீர்கள். இது நல்ல விஷயமாக இருந்தாலும் இதில் என் கருத்தையும் பதிவு செய்வது கடமை.

சினிமா நடிகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் மக்களுடன் நேரடி தொடர்பு இல்லை என்பதால் அவர்கள் நிவாரண நிதியை நேரடியாக அரசிடம் வழங்குகிறார்கள். நம் கட்சிக்கு தமிழக முழுவதும் அடித்தள கட்டமைப்பு பலமாக இருக்கிறது.

எனவே 18 எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளத்தை கட்சி நிர்வாகிகள் மூலம் நேரடியாக மக்களுக்கு நிவாரண உதவிகளாக வழங்குவது தான் சிறந்ததாக இருக்கும். மக்களை நேரடியாக சந்தித்துக் கொடுத்தால்தான் நம் கட்சியின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும்.

அதற்கு மாறாக முதல்வரிடம் பொது நிவாரண நிதியில் வழங்கும்போது பத்தோடு பதினொன்றாக போய்விடும். நாம் நேரடியாக மக்களிடம் வழங்கினால் மக்களுடன் உறவு பல பேரும். 

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கும் நிவாரணத் தொகையை நம் கட்சியின் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் வாயிலாக மக்களுக்கு நேரடியாக வழங்கலாம்.

இது தவிர மாவட்ட, நகர, வட்டார தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழியாகவும் வழங்கலாம். இந்த யதார்த்த உண்மையை புரிந்து கொண்டு சரியான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி முதல்வரிடம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்க திட்டமிட்டு இருந்த நிலையில் அக்கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leaders are against giving relief fund to CM MKStalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->