சத்தீஸ்கரில் வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநில பொது தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எனப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிர படுத்தியுள்ளன. இந்த நிலையில் சத்தீஸ்கரை ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி,

1)ஆண்டுதோறும் பீடி இலை சேகரிப்பவர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும்

2) விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடரும்

 3) மழலையர் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசக்கல்வி

 4)வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்

5) குப்சந்த் பாகேல் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை

6) முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை

 7) ரூ.500-க்கு சமையல் எரிவாயு

8) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என சத்தீஸ்கர் மாநிலமுதலமைச்சர் பூபேஸ் பெகல் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress made promises in Chhattisgarh election2023


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->