காங்கிரஸ் கட்சிக்கு இந்துக்கள் குறித்தோ தேசத்தை குறித்தோ எந்த அக்கறையும் கிடையாது - பிரதமர் மோடி குற்றசாட்டு!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்தவகையில், மக்களவை தேர்தலுக்கான மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. நான்காம் கட்ட வாக்குபதிவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டில் பாஜக பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

பிரச்சாரத்தில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசுகையில்,கடவுள் கிருஷ்ணரின் நிறம் கொண்ட மக்களை ஆப்பிரிக்கர்கள் என்று காங்கிரஸ் அழைக்கிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி வகிக்க விரும்பவில்லை. காங்கிரஸ் தலைவர்களைப் போல நான் அரசு குடும்பத்தில் பிறக்கவில்லை. ஏழை குடும்பத்தில் பிறந்தவன்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்காக எதையும்  செய்யவில்லை. பழங்குடியினரும் ஏழை மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு இந்துக்கள் குறித்தோ தேசத்தை குறித்து எந்த அக்கறையும் கிடையாது. காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது. பூர்வ குடி இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற காங்கிரஸ் விரும்புகிறது என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress not care about Hindus or the nation PM Modi alleges


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->