பிரதமருடன் தொடர்பு: நடவடிக்கை எடுக்க மாட்டுறாங்க - போராட்டத்தில் குதிக்கும் திமுக கூட்டணி கட்சி!
CPI Protest against Kovai isha Yoga Center
கோவை ஈஷா யோகா மையத்தை கண்டித்தும், ஈஷா நிறுவனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் 23 ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "ஈஷா அறக்கட்டளை நீண்ட காலமாக 'யோகா' என்ற பெயரில் செயல்படுகிறது. அங்கு பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பெண்கள் யோகா பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு மூளை சலவை செய்யப்படுகிறார்கள். அவர்கள் குடும்பத்தினரையும் சந்திக்க மறுக்கிறார்கள்.
மேலும், அண்மையில் சில பெண்களுக்கு தலையை மொட்டையடிக்க வைத்து இழிவாக நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் விசாரணை உத்தரவிட்டுள்ளது.
ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு ஈஷா மையத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் தலைவர்களின் ஆதரவால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இச்சம்பவத்தை வெளிக்கொண்டு வர மற்றும் ஈஷா மீது விசாரணை நடத்த, வரும் 23ஆம் தேதி கோவை சிவானந்தா காலனி பகுதியில் பெருந்திரளான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று முத்தரசன் தெரிவித்தார்.
English Summary
CPI Protest against Kovai isha Yoga Center