உள்ளாடையை அவிழ்த்து கருப்பு கொடி இருக்கா என்று சோதனை செய்த தமிழக போலீஸ்! கே. பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆளுநர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெறச் சென்ற மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்தசாமி மீது தஞ்சை மாவட்ட காவல்துறையினர் ஆடைகளை கலைந்து உள்ளாடையையும் கழற்றி அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (28.4.2023) தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் (டிஜிபி)க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், "கடந்த 24.4.2023 அன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கரிகாலச் சோழன் அரங்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (எம்.பில்) பெறுவதற்காக அரவிந்தசாமி என்ற மாணவர் தனது பெற்றோர்களுடன் முன்கூட்டியே பணம் செலுத்திப் பதிவுசெய்த அடிப்படையில் பங்கேற்றுள்ளார். இவர் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர். தற்போது திருவாரூரில் உள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில் முதுகலை மாஸ் கம்யூனிகேசன் படித்து வருகிறார். முதல் தலைமுறை பட்டதாரியும் ஆவார்.

அன்று காலை 8.30 மணிக்கே அரங்கத்திற்குள் அமர்ந்திருந்த அரவிந்தசாமியை, இந்திய மாணவர் சங்கத் தலைவர் என்பதாலும், மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் விழாவில் கலந்து கொள்வதில், கருப்புக் கொடி காட்ட வாய்ப்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று தனி அறையில் அடைத்து அவரது உள்ளாடைகளை கழற்றி, வக்கிரப் புத்தியுடன், கருப்புக்கொடி ஒளித்து வைத்துள்ளாரா என சோதனை செய்துள்ளனர். அவரை கடைசி வரை பட்டம் வாங்க அனுமதிக்கவில்லை என்பது மிக மோசமான மனித உரிமை மீறல் நடவடிக்கையாகும்.

மேதகு ஆளுநருக்கு பாதுகாப்பு அளிப்பதிலோ - சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறுபடவில்லை. ஆனால், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்பதன் பேரால் காவல்துறை சட்டத்தை மீறுவதை ஏற்க இயலாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேதகு ஆளுநர் அவர்கள் பட்டமளிப்பு விழா முடித்து சென்றபின், அரவிந்தசாமியின் பட்டம் அங்குள்ள மேஜை மீது வீசப்பட்டு கிடந்துள்ளது. இதுவும் அவரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரிகளை - அரவிந்தசாமியால் அடையாளம் காட்ட கூடிய பெயர் தெரியாத 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கே பாலகிருஷ்ன அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM Condemn to TN Police And Letter to DGP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->