11 மாவட்டங்களில் ஜனவரி 5 முதல் விவசாயிகள் தொடர் காத்திருக்கும் போராட்டம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று (04.01.2022) சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், பி.சம்பத், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வீடுகளில் வாரக்கணக்காக தண்ணீர் தேங்கி மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 5 லட்சம் ஏக்கரில் வேளாண்மை பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகினர். தொடர்ந்து பெய்த மழையால் எவ்வித வேலைவாய்ப்புமின்றி வருமானம் இல்லாமல் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மழை நிவாரண பணிகளுக்காக இந்திய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5ம் தேதி முதல் 11 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPIM SUPORT TO TN FARMERS PROTEST


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->