நரேந்திர மோடி மீது டெல்லி போலீசில் புகார்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் முழு வீட்டில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். 

இதற்கு காங்கிரஸ் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மதவாத அரசியலை தூண்டி தேர்தல் ஆதாயம் தேட நினைப்பதாக பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. 

இந்த நிலையில் நரேந்திர மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தாகாரத் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் இரு பிரிவினர் இடயே மோதலை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் பேசி வருவதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPM police complaint against Narendra Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->