குழந்தைகள் கடத்தல் தடுப்பில் மத்திய அரசிற்கு நெருக்கடி?...உச்ச நீதிமன்றம் போட்ட அந்த அதிரடி உத்தரவு என்ன? - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில், நாட்டில் குழந்தைகள் கடத்தலை தடுக்க உத்தரவிடக்கோரி  தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த மனுக்கள், நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதற்கிடையே குழந்தைகள் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்ட பல்வேறு நபர்களுக்கு மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள்  ஜாமீன் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் போது பேசிய நீதிபதிகள், குழந்தை கடத்தலின் தீவிரத்தன்மையை உணராமல் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜாமீனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் காணாமல் போனதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன  என்றும், அவற்றில் அடுத்த 4 மாதங்களுக்குள் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டன என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் எத்தனை பேரை இன்னும் மீட்கவில்லை என்றும், அவர்களை மீட்கவும், குழந்தைகள் கடத்தலை தடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த கேள்விகளுக்கான பதிலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்படுகிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crisis for central government in preventing child trafficking what is the action order given by the supreme court


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->