ஃபெஞ்சல் புயல் எதிரொலி: தொண்டர்களுக்கு உத்தரவிட்ட எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன்! - Seithipunal
Seithipunal


தொடர் கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சூழ்ந்திருக்கும் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வடதமிழ்நாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் வேகமான காற்றுடன்  மழை  பெய்து வருகிறது,


 
எனவே பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், மிக அத்தியாவசிய தேவைகள்  ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரத்தில் வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.

மேலும் பொதுமக்கள் சாலைகளில் நடக்கும்போது கழிவு நீர் குழாய் திறப்புகள் மூடியுள்ளனவா என்றும், மின்கம்பிகள் எதுவும் அறுந்து விழுந்துள்ளதா என்பதையும் கவனத்தில் கொண்டு 
நடந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

அதேசமயம் அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும், அம்மா உணவகங்கள் 
24மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள  மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக அவர்களிடத்தில் சென்று  செய்திடுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிவிப்பில், "ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வட தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதோடு, பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களுக்கு தங்களால் இயன்ற அத்தியாவசிய உதவிகளை செய்துத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone Chennai Rain Flood EPS TTV Request


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->