வாணியம்பாடி : இஸ்லாமிய தாதா., கஞ்சா மன்னன்., கட்டப்பஞ்சாயத்து தலைவன் 'டீல்' இம் தியாஸ்.! யார் இவன்?!
deel imtiyaz
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சேர்ந்தவர் வசிம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைச் செயலாளராக இருந்து வந்தார். மேலும், இவர் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். அண்மையில், இவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

(கொலை செய்யப்பட்ட வசிம் அக்ரம்)
அந்த பகுதியில் கஞ்சா விற்று வந்தவர், அதே வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவரின் மகன் இம் தியாஸ் (வயது 39). இவன் வாணியம்பாடியில் பிரபல கஞ்சா வியாபாரியாக இருந்து வந்துள்ளான்.

கஞ்சா மன்னன் இம் தியாஸ்
இவன் மீது ஏற்கனவே பல புகார்கள் அளித்த போதிலும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளதாக்க சொல்லப்படுகிறது. மேலும், இம் தியாஸ் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளுடன் பழக்கம் உள்ளிட்ட தொடர்புகள் மூலம் தனக்கென்று ஒரு குறிப்பிட்ட வயது உடைய வாலிபர்களை தனது கையில் போட்டுக்கொண்டு, ரவுடி போல வலம் வந்துள்ளார்.
அந்த வந்து சிண்டுகள்., இம் தியாஸ்யை ஆகா., ஓகோ., என்று கான பாடி புகழ்ந்து தள்ளி வந்துள்ளனர். மேலும், இம் தியாஸ்க்கு "டீல் இம் தியாஸ்" என்று வாணியம்பாடி பகுதியில் அழைத்து வருகின்றனர். இந்த வாணியம்பாடி இஸ்லாமிய தாதா இம் தியாஸ்க்கு கையாட்களாக இருக்கும் பதின்பருவ சிறுவர்கள் மற்றும் வாலிபர்களின் கையில் Deen என்று பச்சை குத்தி அவனின் புகழைப் பாடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கஞ்சா விற்பனை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்த காரணத்தினால், வசிம் அக்ரமை கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளான் கஞ்சா மன்னன் இம் தியாஸ். இதற்காக அவர் ஒரு கோடி ரூபாய் உள்ள சொத்தை விற்பனை செய்து, அதில் 50 லட்சம் ரூபாயை கூலிப்படையினர் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும், 50 லட்சம் ரூபாயை தனது சகோதரிக்கு இம் தியாஸ் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த படுகொலை சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி இது குறித்து கவன ஈர்ப்பு கொண்டு வந்தார், மேலும், இந்த படுகொலையை கண்டித்து வெளிநடப்பு செய்திருந்தார்.
கூலிப்படையை சேர்ந்தவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், மீதமுள்ள குற்றவாளிகள் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி இம் தியாஸ் சிவகாசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.