ஆம் ஆத்மி கட்சியின் நான்கு முக்கிய தலைவர்கள் பாஜகவில் தஞ்சம்!  - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் நான்கு முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டபேரவை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேர் இணைந்துள்ளனர். டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் செயல்பாடு, வளர்ச்சியின்மை மற்றும் தவறான நிர்வாகத்தை ஏற்க முடியாமல் பாஜகவுக்கு மாறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

பஜன்புராவைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ஷிப்லா கௌர், தனது பகுதியில் வளர்ச்சி இல்லாததைக் காரணமாகக் கூறினார். மற்றொரு கவுன்சிலரான ரேகா ராணி, ஆம் ஆத்மியின் ஆட்சியில் ஏற்பட்ட ஏமாற்றமே கட்சி மாறுவதற்கான காரணம் என குறிப்பிட்டார்.

மேலும், கோண்டாவின் முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஸ்ரீதத் ஷர்மா மற்றும் எம்பி பிரதிநிதி சவுத்ரி பிஜேந்தர் பிரதான் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi AAP BJP Election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->