BigBreaking: டெல்லிக்கு வரும் பிப்ரவரி 5 தேர்தல்!
Delhi Assembly election date announce 2025
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக மொத்தம் 70 தொகுதிகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: 10.01.2025
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: 17.01.2025
வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை: 18.01.2025
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: 20.01.2025
தேர்தல் நாள்: 05.02.2025
வாக்கு எண்ணிக்கை: 08.02.2025
தேர்தலுக்கான ஏற்பாடுகளில், மொத்தமாக 13,033 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 70 வாக்குச்சாவடிகள் முழுமையாக பெண்களால் நடத்தப்படும் என்ற சிறப்பம்சமும் உள்ளது.
சராசரியாக, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 1,191 வாக்காளர்கள் வாக்களிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Delhi Assembly election date announce 2025