டெல்லி தேர்தல்: பாஜக வெளியிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதி! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை மாணவர்களுக்கு கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி வழங்கப்படும் பாஜக என்று பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது, முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும்.

தேர்தலை முன்னிட்டு, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முதல் பகுதியில், மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் 'மகிளா சம்ரிதி யோஜனா', கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.21,000 உதவி, இலவச எல்பிஜி சிலிண்டர் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையின் இரண்டாம் பகுதியை இன்று வெளியிட்டுள்ளது. பாஜக எம்பி அனுராக் தாக்கூர் தேர்தல் அறிக்கை குறித்து தெரிவிக்கையில், "டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் நீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவோம். 

மேலும், டெல்லி இளைஞர்களுக்குப் போட்டித் தேர்வுக்கு ரூ.15,000 நிதி உதவியும், விண்ணப்பக் கட்டணம் திருப்பிச் செலுத்தும் வசதியும் செய்யப்படும்,” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi BJP Election 2025 manifesto


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->