டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..! - Seithipunal
Seithipunal


டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை தொடர்பான சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப் பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டார். 

தற்போது திகார் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை இதே வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு திகார் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். முன்னதாக இந்த சிபிஐ விசாரணைக்காக டெல்லி நீதிமன்றம் 3 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் கெஜ்ரிவாலை சிபிஐ காவலில் எடுத்து 3 நாட்கள் முடிந்ததை அடுத்து, அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது சிபிஐ மேலும் விசாரிக்க வேண்டிய தேவை உள்ளதால் காவல் நீட்டிப்பு செய்ய அனுமதி கோரியுள்ளது. 

இதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். 

முன்னதாக கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை விதிக்க கோரி அமலாகத் துறை டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் முறையீடு செய்தது குறிப்பிடத் தக்கது. இதை எதிர்த்து கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் தான் சிபிஐ அதிகாரிகள் அவரை திகார் சிறையில் வைத்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi CM Arvind Kejriwals Court Custody Extended


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->