வெற்றிபெற்றால் சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் - பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!
delhi Priyanka Gandhi BJP candidate Aam Aadmi Party Congress
வரும் பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி இருக்கப்போவது உறுதியாகியுள்ளது.
முதல்வர் அதிஷி போட்டியிடும் கல்காஜி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா மற்றும் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி மோதவுள்ளனர்.
இதில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி, மூன்று முறை எம்எல்ஏ மற்றும் இரண்டு முறை எம்பியாக இருந்தவர்.
இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், பிரியங்கா காந்தி குறித்து ரமேஷ் பிதுரி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில், "ஓக்லா மற்றும் சங்கம் விஹார் சாலைகளை நான் மேம்படுத்தியதைப்போல், கல்காஜி தொகுதி சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன்" என பேசி இருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "இந்த பேச்சு பாஜகவின் பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது" என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்பியா ஷ்ரினேட் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், "இப்படிப்பட்ட தலைவர்கள் டெல்லி பெண்களின் பாதுகாப்புக்கு உரியவர்களா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
delhi Priyanka Gandhi BJP candidate Aam Aadmi Party Congress