#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டில் 2.65கோடி பறிமுதல்-லஞ்ச ஒழிப்புத்துறை.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 2.65  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து இன்று காலை முதல் சோதனையானது நடைபெற்றது.

கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும், சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் ₨2.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Department of Anti-Corruption handover 2.65 cr in Anbazhagan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->