முத்துராமலிங்கத்தேவர் தங்க கவசம்! படைபலத்துடன் சென்ற முன்னாள் அமைச்சர்கள்! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13 கிலோ எடை உள்ள தங்க கவசத்தை வழங்கினார்.

இந்த தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜையின் போது, அதிமுக சார்பில் தேவர் தங்க கவசம் அந்த தனியார் வங்கியில் இருந்து பெற்று தரப்படும்.

அந்த வகையில் இந்த வருடம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன், தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரி உள்ளார்.

கடந்த வாரம் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் பெற உரிமை கோரிய திண்டுக்கல் சீனிவாசன், இன்று நேரடியாக வங்கிக்கு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு உடன் இருந்தனர். தொடர்ந்து தேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோருவதற்கான அலுவல் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DEVAR GOLD Shield EPS side


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->