திங்கள்கிழமை முதல் வழக்குகள் நேரடி விசாரணை,.! - Seithipunal
Seithipunal


வரும் திங்கள் கிழமை முதல் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணை நேரடியாகவே நடத்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அனுமதி அளித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் காணொளி வாயிலாக வழக்குகள் விசாரணை நடைபெறலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதால், நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார் என்றும், நேரடி விசாரணையின் போது, சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரொனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நொதிமன்ற வளாகங்களில் உள்ள வழக்கறிஞர்களின் அறைகள், சேம்பர்களை திறக்கவும், நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலகங்கள் மற்றும் உணவகங்களை மறு உத்தரவு வரும் வரை திறக்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேரடி விசாரணைக்கு வரும் வழக்குரஞர்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்கள் கட்டாயம் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தி இருப்பது அவசியம் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Direct hearing in the courts


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->