தீபாவளி எதிரொலி : டாஸ்மாக் கடைகளில் வசூல் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை அதிகளவு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும். மேலும், அரசு டார்கெட்டை நிர்ணயித்து மதுபான விற்பனை செய்யும்.

கடந்த 2023-ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களாக அரசு மதுபானக் கடைகளில் 467.69 கோடி ரூபாய் அளவிற்கு மதுபான விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியானது. மேலும் இது பெரும் பேசு பொருளாக மாறியது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை நாட்களில் மதுபான விற்பனை படு ஜோராக நடைபெற்றது. இந்த நிலையில், இந்த ஆண்டு மதுபான விற்பனை வசூல் எவ்வளவு என்பதனை வெளியிட டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

அதன்படி, எந்த காரணத்தை கொண்டும் மதுபான விற்பனை வசூல் வெளியே கசிய கூடாது என்று டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali echo do you know how much collection is in tasmac stores


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->