களத்தில் இறங்கும் பிரேமலதா விஜயகாந்த்! வெளியான அறிவிப்பு!
DMDK Erode Election campaign
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொரருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆறு நாள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்தை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிப்ரவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 24-ம் தேதி வரை, வீதி வீதியாக சூறாவளி பிரச்சாரம் செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பார்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
DMDK Erode Election campaign