தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அண்மையில் கால் விரல்கள் அகற்றப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது நலனை பலரும் விசாரித்து வருகின்றனர். 

மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் கால் விரல் நீக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நலம் விசாரித்தார். ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விஜயகாந்த் நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK leader Vijayakanth's health information released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->