தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
DMDK premalatha ADMK BJP
தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவிக்கையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து டிவியில் பார்த்தே தான் தெரிந்து கொண்டேன். அது அந்த இரு கட்சிகளின் முடிவு என்பதால் அதில் தாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என விளக்கினார்.
மேலும், தேமுதிக சார்பில் ஏப்ரல் 30 அன்று செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்றே நடந்து வருகின்றது. கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதேபோல் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து பதவிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
அடுத்த ஆறு மாதங்கள் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் பணிகளிலேயே கவனம் செலுத்த இருப்பதாகவும், தேர்தல் இன்னும் ஒரு வருடம் உள்ளதால், யாருடன் கூட்டணி என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
கூட்டணி குறித்து எந்த தவறான தகவல்களையும் பரப்ப வேண்டாம், அவ்வாறான செய்திகளை தவிர்க்க வேண்டியும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் தொடர்பான முடிவு, அந்தக் கட்சியின் தானாக நடந்த ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது என்றும், புதிய தலைவருக்கு வாழ்த்துகள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.