முதல்வர் உதயநிதி ஸ்டாலின்? வைரலாகும் புகைப்படம்.!!
DMK banner udhayanithi as cm of Tamilnadu viral
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை "முதல்வர் அவர்களே வருக! வருக!" என வரவேற்று வைக்கப்பட்டுள்ளது பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு இன்று சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வருகை புரியும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை வரவேற்று திமுக சார்பிலும் அரசு சார்பிலும் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான தா.மோ அன்பரசன் சார்பில் வைக்கப்பட்ட பேனரில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் "மக்கள் போற்றி பாராட்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களே வருக வருக" என வைக்கப்பட்டுள்ள பேனரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு அமைச்சராக மு.க ஸ்டாலின் இருந்து வரும் நிலையில் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் எனக் குறிப்பிட்டு பேனர் வைக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
English Summary
DMK banner udhayanithi as cm of Tamilnadu viral