முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்த கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிந்ததால், நிகழ்வில் அவர்கள் செல்ல போலீசார் மற்றும் அதிகாரிகள் தடை விதித்ததாக புகார் எழுந்துள்ளது.

துப்பட்டாக்களை ஒப்படைத்த பின்னரே மாணவிகள் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் துப்பட்டாக்கள் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை ஒட்டி, கருப்பு துப்பட்டா பயன்படுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் முயற்சியை தடுக்கும் நோக்கில் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இவ்விவகாரத்தில் தமிழக அரசு அல்லது திமுக தரப்பில் எந்த விதமான விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, "இனி திமுக நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் பங்கேற்கும் போது, திமுக கொடி கூட இருக்கக்கூடாது என்று உத்தரவு விடுவார்களா?" என விமர்சித்துள்ளார்.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK CM Stalin Black shall ban


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->