திமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்.. துரைமுருகன் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை ராயபுரம், 51 வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனா. அவரது கணவர் ஜெகதீசன். இவர் திமுக நிர்வாகி ஆவர். ஜெகதீசன் நேற்று முன்தினம் நள்ளிரவு ராயபுரம், ஜேபி கோவில் தெருவில் தன் ஆதரவாளர்களுடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை காவல் துறையை சார்ந்த காவலர்கள் தியாகராஜன், மணிவண்ணன் உள்ளிட்டோர் கும்பலாக நிற்பது குறித்து விசாரித்தனர். அப்போது ஜெகதீசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். 

மேலும் நான்தான் கவுன்சிலர் என ஜெகதீசன் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராயபுரம் கிழக்குப்பகுதி 51வது வார்டு சேர்ந்த ஜெகதீசன் கழக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Councilor Husband Dismissal for Party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->