வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல்! - Seithipunal
Seithipunal


தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்துள்ளார். 

கடந்த மக்களவை பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, தயாநிதிமாறன் தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக தொகுதி மக்களுக்கு செலவிடவில்லை என்று, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தார். 

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதிமாறன், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு தற்போது எம்எல்ஏ, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் தயாநிதிமாறன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். 

கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கில் இன்று தயாநிதிமாறன் ஆஜராக உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்திருந்த நிலையில், இந்த முறையும் தயாநிதிமாறன் நேரில் ஆஜராகவில்லை. 

அதே சமயத்தில் தயாநிதிமாறன் வழக்கறிஞர் சார்பில் ஒரு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னை இந்த வாழ்க்கையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Dhayanithimaaran DMK ADMk EPS case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->