மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி! மத்திய அரசுக்கு கடும் கண்டனம் - திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்!
DMK District Secretary meet MK Stalin BJP PM Modi
பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைப்பெற்று வரும் திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கருணாநிதிக்கு நாணயம் வெளியிட உள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்ததாக, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதில் முதல் தீர்மானமாக கடந்த மக்களவைத் தேர்தலில் 40 க்கு 40 என்ற வெற்றிக்கு வழி வகுத்த முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாவதாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி உடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாணயம் வெளியிட உள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மூன்றாவதாக நிதி பகிர்வில் வஞ்சனை செய்யும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாகவும் ஒரு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரியும், மாதாந்திர மின் கணக்கீடு முறையை அமல்படுத்த கோரியும், நியாயவிலைக் கடைகளில் அத்தியாசிய பொருட்கள் வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம் என மொத்தம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
English Summary
DMK District Secretary meet MK Stalin BJP PM Modi