அமைச்சர் கே.என் நேரு தலைமையில் பஞ்சாயத்து.!! சூடு பிடிக்கும் மதுரை திமுகவின் உட்கட்சி பூசல்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்ட திமுகவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் தளபதி ஆகியோருக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி மதுரை மாநகர் மேயர் பதவியை தனது ஆதரவாளர் இந்திராணிக்கு பெற்று தந்தார். மதுரை மாநகர் கவுன்சிலர்கள் 69 பேரில் 60 பேர் அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளராக உள்ளதால் மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே பனிப்போர் இருந்து வருகிறது.

இந்த நிலையில் திமுக தலைமையின் உத்தரவின் அடிப்படையில் மதுரையில் மாநகராட்சி மேயர் இந்திராணிக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நேற்று பஞ்சாயத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக கவுன்சிலர்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கண் அசைவிற்கு ஏற்றவாறு மேயர் இந்திராணி செயல்படுகிறார். அமைச்சரின் பங்களாவிற்கு செல்வோருக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. அமைச்சர் மூர்த்தி, நகர செயலாளர் தளபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆதரவு கவுன்சிலர்களை மேயர் இந்திராணி கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டினர்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என் நேரு "ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் எதிர்பார்கள் என நான் நம்பவில்லை. மத்திய தொகுதியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வதை மேயர் கேளுங்கள். அதேபோன்று அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் தளபதி பரிந்துரைகளையும் மேயர் ஏற்க வேண்டும்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்க வேண்டும். அதே போன்று கவுன்சிலர்களுடன் மேயர் ஒத்துழைத்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் எதிர்பார்க்கும் நாடாளுமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற உழைக்க வேண்டும்" என பி.டி.ஆர் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைச்சர் கே.என் நேரு பேசியுள்ளார். இந்த விவகாரம் மதுரை மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK KN Nehru peace talks between Madurai district DMK officials


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->