நெஞ்சுவலி! அமைச்சர் கேஎன் நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!
DMK minister kn nehru brother Hospitalised
தமிழக அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அவரின் சகோதரர் ரவிச்சந்திரனுடன் தொடர்புடைய நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் இல்லத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற சோதனை இன்று முடிவுக்கு வந்தது. அந்த வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோதனை நிறைவடைந்ததும், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றும் கேஎன் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது அவர் நெஞ்சு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அங்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
DMK minister kn nehru brother Hospitalised