சிறையா? அமைச்சர் பதவியா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி!
DMK Minister Senthil Balaji case Supreme Court
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வேண்டுமா, அமைச்சர் பதவி தொடர வேண்டுமா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேரடி கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஜாமின் கிடைத்த பிறகு தான் அவர் அமைச்சராக பதவியேற்றதாக அவரது தரப்பினர் வாதம் செய்தனர். ஆனால், ஜாமின் வழங்கிய நேரத்தில் அமைச்சர் பதவியை ஏற்க அனுமதி வழங்கப்படவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், “செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைப்பதைத் தடுக்க முடியுமா? எப்படி அதனை நிச்சயமாகச் சொல்ல முடியும்?” எனக் கேள்வியெழுப்பி, அமைச்சராக இருந்தபோது அவர் செய்த சமரசங்கள் குறித்த பதிவுகள் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன், சாட்சிகள் மீது தாக்கம் செய்யும் அபாயம் உள்ளதாக கருதி, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இது தொடர்பாக, “செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்படாதது அவருடைய அரசியல் நிலைப்பாட்டினால் அல்ல. அரசியல் அதிகாரம் மற்றும் பதவியின் தவறான பயன்பாட்டை கருத்தில் கொண்டு, அரசியல் சாசனத்தின் பிரிவுகளை மீறியதாலே ஜாமின் மறுக்கப்பட்டது” என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
English Summary
DMK Minister Senthil Balaji case Supreme Court