மொத்தம் 2202 பேர்! 100 பேருக்கு சம்மன்! இன்று நேரில் ஆஜராகிய செந்தில்பாலாஜி! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று அவர் அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை எம்பி, எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியுள்ளார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது ஆஜராகி உள்ளார்.

அவருக்கு வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2202 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதில் முதல்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 24 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று செந்தில்பாலாஜி வழக்குகளில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு:

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற வழக்கு:

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கு மற்றும் அமலாக்கத் துறையின் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதில், அமலாக்கத்துறை வழக்கில் சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது, வழக்கு விசாரணையை வரும் அக்,14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க செந்தில்பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வரும் அக்,4 ஆம் தேதி ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டார்.

 

உச்சநீதிமன்ற வழக்கு:

அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளி்ட்டோருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அடுத்த விசாரணைக்குள் அளிக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து துறையில்  வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடர்ந்த வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய கோரி மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Senthilbalaji case Chennai Special Court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->