திமுகவின் பெயரை மாற்றிய ஹெச் ராஜா! கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்!
DMK MK Stalin BJP H Raja
பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச் ராஜா தனது சமூக வலைதளப்பாக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுகவை 6 முறை ஆட்சியிலே அமர்த்திய தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவோ, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவோ, தமிழகத்தின் வளர்ச்சிக்காகவோ எதையுமே செய்யாமல்..!!
(தி)ருக்குவளை (மு)த்துவேலர் (க)ருணாநிதி குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே ஆட்சி செய்வதற்குப் பெயர் தான் திராவிட மாடலோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரின் மற்றொரு பதிவில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் 2021 தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்திருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக அரசு எந்த கடனையும் இதுவரை தள்ளுபடி செய்யவில்லை மாறாக தேர்தலில் அளித்த வாக்குறுதிகளைத்தான் தள்ளுபடி செய்திருக்கிறது.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக எத்தனை பொய்களை வேண்டுமானாலும் சொல்லும்!
ஆட்சிக்கு வந்த பின்பு தேர்தலில் சொன்ன பொய்களை மறைக்க எத்தகைய பொய்களை வேண்டுமானாலும் சொல்லும்! பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த போலியான அரசியல் இயக்கம் திமுக.
தட்டினால் தங்கம்! வெட்டினால் வெள்ளி! என வாயால் வடை சுட்டு வார்த்தை ஜாலங்களால் ஆட்சியை பிடித்த ஏமாற்றுப் பேர்வழிகள் தானே இந்த திராவிட மாடல் கும்பல். அண்ணாதுரை காலம் தொட்டே திமுக வரலாறு அப்படி" என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.