நாங்க ஏன் கவலை பட போறோம்! அதெல்லாம் காமெடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


நாமக்கலில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மதிவேந்தன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதலான்ச்சர் ஸ்டாலின் பேசுகையில், "செழிப்பான பூமி நாமக்கல் மாவட்டம். லாரி கட்டமைப்பு மூலம் இந்தியா முழுவதும் சரக்கு போக்குவரத்துக்கு அடித்தளமாக விளங்கும் மாவட்டம், கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி, ஜவ்வு அரிசி ஆலை என பொருளாதாரத்தை வளர்க்கும் தொழில்களும், நன்செய், புன்செய் நிலங்களும் நிறைந்த செழிப்பான பூமி நாமக்கல் மாவட்டம்.

நாமக்கல்லில் கருணாநிதி சிலை அமைவது பொருத்தமானது. நாமக்கல் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலைலையை திறந்து வைத்திருக்கிறேன்.

நாமக்கல்லில் அவரது சிலை அமைவது மிகவும் பொருத்தமான ஒன்று, ஏனென்றால் சேலம் மாவட்டத்தில் இருந்து 1972ல் நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கியது முன்னாள் முதலமைச்சர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான்.

திமுகவின் மதிப்பு சரிந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அவர் கனவுலகில் இருக்கிறாரா? எதிர்க்கட்சித் தலைவர் கூறுவதை மக்கள் காமெடியாக எடுத்துக்கொள்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மதிப்பு அடமானம் வைக்கப்பட்டிருந்தது. மக்களால் புறக்கணிக்கப்பட்ட அதிமுகவைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin say about ADMK EPS Namakkal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->