நெஞ்சில் கட்சியில் கொடி ஏற்றி, வாரிசை களமிறக்கிய உதயநிதி! குடும்பத்துடன் முதல்வரை சந்தித்து வாழ்த்து!
DMK MK Stalin Udhay Inbanithi
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி தனது மகன், மனைவியுடன் சென்று பொங்கல் வாழ்த்து பெற்றார்.
இது குறித்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் உதயநிதி பதிவிட்டு, "இந்திய ஒன்றியத்தின் ஒப்பற்றத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் - அன்னையாரிடமும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்பத்தாருடன் இன்று காலை வாழ்த்து பெற்றோம். நம் பண்பாட்டுத் திருநாளாம் பொங்கல் பண்டிகையைப் போற்றி மகிழ்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உதயநிதியின் மகன் இன்பநிதி அணிந்துள்ள டி-ஷர்ட்டில் திமுகவின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை கவனித்த நெட்டிசன்கள், திமுகவில் அடுத்த வாரிசு கட்சியில் களமிறக்கப்பட்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.
English Summary
DMK MK Stalin Udhay Inbanithi