அதிரும் மாநகரங்கள்! தடுமாறும் திமுக! அடுத்த பேரிடி! நிறைவேறிய நம்பிக்கையில்லா தீர்மானம்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக திமுக உட்பட 33 கவுன்சிலர்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வரும் 29 ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உச்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தமிழகத்தின் அனைத்தையும் மாநகராட்சிகளையும் தன்வசப்படுத்தியது.  

ஆனால், தற்போது மாநகராட்சி மேயர்களுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

இதில் கோவை, நெல்லை மேயர் ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டனர். தற்போது காஞ்சிபுரம் மேயரும் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் எப்போதும் உள்ளதாக அளவுக்கு அண்மை காலமாக அரசியல் கொலைகள், கள்ளச்சாராய மரணம், கஞ்சா, ரவுடிசம், ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலினின் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு இருப்பது அப்பட்டமாக தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
.

மேலும், இணையத்தில் திமுக மற்றும் திமுகவின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் சிலர் சகட்டு மேனிக்கு கருத்துக்களை கூறி ஆளும் திமுகவிற்கு தலைவலியை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சருக்கு நிகராக கருதப்படும் மேயர்கள் ராஜினாமா செய்யப்பட வைப்பதும், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு கொண்டுவருவதெல்லாம், திமுகவின் தலைமைக்கு அக்கட்சினர் கட்டுப்படவில்லை என்பதையே அம்பலப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MKStalin Kanchipuram Mayor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->